மனத்துக்கண் மாசு.
மனதுக் குள்ளே
கடகட சப்தம்;
மௌனம் காப்பேன் வாயைப் பூட்டி.
கனவுக் கன்னியர்
நர்த்தனம் நெஞ்சில்
காமம் காப்பேன்
ஊருக் கஞ்சி!
சினமும் வெறுப்பும்
சிந்தை நிறைய;
சிரிப்பாய் மலரும்
முகத்துப் பூச்சு!
அனைத்துக் கும்பேர்
அறிவோ மாகில்
அதுதான் பொய்ம்மை
ஒழுக்கம் என்பது!
No comments:
Post a Comment