Thursday 3 November 2016

யானடி வீழ்ந்தேன்!

யானடி வீழ்ந்தேன்!
(ஹி..ஹி..1962லே எழுதினது.)
பாலாவி என்னமெலி நூலாடை தரிக்கின்ற
      பாவை உனதடியேன்; எழிற்பார்வைக்கும் அடியேன்!
காலேஜு சென்றிடநீ காலெடுத்து வைக்கின்ற
      கவர்ன்மெண்ட்டு பஸ்ஸுக்கும் கண்டக்டர்க்கடியேன்!
சீரான பாதமலர் படுமுன்றன் எழிலான
      ஸ்லிப்பருக்கும் அடியேன்; ஷிஃபானுக்கடியேன்!
வாராமல் வாரிவிட்ட கூந்தலுக்கும் பூவிற்ற
      மலர்க்காரப் பாட்டிக்கும் பேரனுக்கும் அடியேன்!
தித்திக்கும் மாலா உன் பேர்சொல்லும் பிச்சம்மாத்
      தோழிக்கும் அடியேன்; அவள் தம்பிக்கும் அடியேன்!
கத்தியைப்போல் பிரம்புசுற்றிக் கனல்கக்கி வருகின்ற
      காலனுன்றன் அப்பாவின் கைத்தடிக்கும் அடியேன்!
இனியகரம் சுமக்கின்ற புத்தகத்துக் கட்டுக்கும்
      எழுதியபே ராசிரியர் எல்லார்க்கும் அடியேன்!
மனமுவந்து சொன்னாயே ‘இடியட்டு’ என்கின்ற
      வார்த்தைக்கும் அடியேன்; வாய்மலர்க்கும் அடியேன்!




2 comments:

  1. கோனார் நோட்ஸ் லே தேடிப்பார்த்தேன்.
    அகப்பொருள் தெரியவில்லையே !!

    பாலாவி என்றால் என்ன ?

    பால் ஆவியானதா
    இல்லை
    பாலா ஆவியாகி போனாளா !!

    ReplyDelete
    Replies
    1. பாலைப்பற்றி கோனாரே சொல்லவில்லை என்பது ஆச்சரியம்!

      Delete