Saturday 13 August 2016

எண்ணங்கள்

எண்ணங்கள்
எண்ணங்கள் சுமையாய்ப்போச்சு!
எப்படித் தூக்கிப்போட?
கர்ணனின் கவசம்போலக்
கழற்றிடல் கஷ்டமகும்!
கவிதையாய்ப் பாட ஒண்ணாக்
கசடான பல எண்ணங்கள்!
செவிகைத்துப்போகும் என்று
சேமமாய்ப்பூட்டி வைத்தேன்!
சாஸ்தாவைப் பற்றி எண்ணம்!
சாத்தானின் எண்ணம்கூட!
பேய்த்தன எண்ணத்தோடு
பேராண்மை எண்ணம் சேரும்!
நயந்தாராபற்றி எண்ணம்!
நாய்த்தொல்லை பற்றி எண்ணம்!
கமலினைப்பற்றி எண்ணம்!
கபாலிபற்றி எண்ணம்!
அழகிய பெண்ணைப்பற்றி
அசிங்கமாய் ஒற்றை எண்ணம்!
அத்துடன் பஜகோவிந்த
ஆசார்யப் பவித்ர எண்ணம்!
அடுத்தவர் மேன்மை கண்டு
அசூயை கொண்ட எண்ணம்!
அன்பையே உருவாய்க்கொண்ட
ஆர்வலர் தூய எண்ணம்!
அம்மாவின் மரணவேளை
அருகிலாச்சோக எண்ணம்!
அப்பப்போ பணிவிடைகள்
அன்புடன் செய்த எண்னம்!
ஆகாய மாளிகைக்கு
அடுக்கிய அட்டை எண்ணம்
அது கலைந்துபோக
அழுகையாய் வந்த எண்ணம்!
இதைச்செய்வேனதைச்செய்வேனென்று
இலட்சிய வேக எண்ணம்!
கதையாகக் கனவாய்ப்போக
கழிந்ததற்கேங்கும் எண்ணம்!
பாதகம் செய்தபேரை
மோதி மிதிக்கும் எண்ணம்!
பயம் கொண்டு பின்னால் சென்று
பதுங்கிய கோழை எண்ணம்!
எழுபது ஆண்டு செய்த
இழிசெயல் பற்றி எண்ணம்!
அம்ருதஸ்ய புத்ர என்று
ஆறுதல் கூறும் எண்ணாம்!
எரியுண்டு போகும்போது
என்னத்தை விட்டுச் செல்வேன்?
எலும்புகள் கூடச் சேர்த்து
எண்ணங்கள் பொறுக்கிக்கொள்வீர்!
LikeShow More Reactions
Comment
Comments
Venkata Ramani
Write a comment...

1 comment:

  1. //அழகிய பெண்ணைப்பற்றி
    அசிங்கமாய் ஒற்றை எண்ணம்!
    அத்துடன் பஜகோவிந்த
    ஆசார்யப் பவித்ர எண்ணம்!//

    அன்றைய வெங்கடரமணி
    இன்றும் என் கண்முன் நிற்க

    அன்றைய வேங்கடவன்
    இன்றும் என் நெஞ்சுள் நிற்பது போல. .

    நினைவுகள் கடல் அலையில்
    நிஜங்கள் சில சுறா மீன்கள்.


    புட்பங்கள் வாடிடினும்
    புன்னகைகள் வரண்டிடுமோ ?

    சுப்பு தாத்தா.
    www.myasram.blogspot.com

    ReplyDelete