சாரும்மா
(கொஞ்ச தினமே என்னுடன் கூட இருந்து கொள்ளை இன்பம் தந்த சாருக்குழந்தை
அயல்நாட்டிலுள்ள சொந்த ஊருக்குச் செல்கிறது.)
ததக்காபிதக்கா நடைநடந்து
தளிர்க்கரம்நீட்டி
வருகிறது;
இதமாய்என்றன் தோள்சாய்ந்து
இன்பம்கொள்ளை தருகிறது!
கதவின்பின்னால் மறைந்திருந்து
கண்ணாமூச்சி விளையாட்டு!
பதமாய்ச்சோறு பாட்டிதரப்
படங்கள்பார்த்து
ரசிக்கிறது!
உம்மாச்சீபடம் காட்டிடிலோ
உற்சாகத்தால் துள்ளிடுது!!
அம்மாவுடனே விண்ணேறி
அயல்நாட்டுக்குச்
செல்கிறது!
சும்மாஇருந்தேன்; சுகம்தந்து
சுமையைவிட்டுச்
செல்கிறது;
வெம்மை எனக்குத் தாங்காது;
விரைவில் வந்திடு,சாரும்மா!
No comments:
Post a Comment