சத்தியாக்கிரகம் பிறந்த கதை
1906
செப்டம்பர் 11.
டிரான்ஸ்வால்
எம்பயர் தியேட்டரில் அரங்கு நிரம்பி வழிந்த கூட்டம். டிரான்ஸ்வால் வாழ் இந்தியர்களை
அவமானப்படுத்துகிற, குற்றவாளிகளைப்போல் நடத்துகிற ,அவர்களது வாழ்வுரிமையைப் பறிக்கிற,
அவசரப் பிரகடனத்தை எதிர்த்து உணர்வுபூர்வமாக ஒன்றுபட்ட இந்தியர்களின் கூட்டம்.
நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களில் ஒன்று. தங்களது எதிர்ப்பையும் மீறி அந்த அவசரப் பிரகடனம் சட்டவடிவம்
பெற்றால், அதற்கு அடிபணிய மாட்டோம்; அடிபணியாததற்கான அனைத்து தண்டனைகளையும் ஏற்றுக்கொள்வோம்
என்று இதயபூர்வமாக உறுதி பூண்ட தீர்மானம்.
ஹாஜி
ஹபீப்சேத் என்ற இந்தியர் உணர்ச்சிவசப் படுகிறார். இறைவனின் பேரில் உறுதிமொழி எடுத்துக்
கொள்கிறார். மற்றவர்களையும் அவ்வாறே இறைவனின்
பெயரால் உறுதி பூண வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார். இந்த வினாடியில்தான் காந்திஜியின் மனத்தில் பளிச்சென்று ஒரு பொறி தட்டுகிறது.
இறைவனின் பெயரால் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி ,பொதுவாகக் கூட்டங்களில் நிறைவேற்றி
மறந்து விடுவது போன்ற இலேசான தீர்மானமல்ல. இறைவனின் பெயரால் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழியின்
புனிதத்தன்மையைக் காந்திஜி விளக்குகிறார். உறுதிமொழியைக் காப்பதற்கான உறுதி தங்களிடம்
இருக்கிறது என்று நிச்சயமாக நம்புபவர்கள் மட்டுமே
அத்தகைய உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விளக்குகிறார். காந்திஜியின் பெச்சை
ஊன்றி கவனித்த அத்தனை பேருமே,அநீதியான சட்டத்துக்கு அடிபணிய மாட்டோம் என்று ,ஏகோபித்து,,கரமுயர்த்தி,
உறுதி பூணுகிறார்கள்.
இதுவே
சத்தியாக்கிரகம் பிறந்த கதை.
No comments:
Post a Comment