பணியின் மூலம் பேரானந்தம்
(19)
செயல்கள் பிரார்த்தனையாக!
பலன்கள் பிரசாதமாக!
கர்ம
யோகிக்கு கடவுள் நம்பிக்கை அவசியமா? அவசியமில்லைதான். ஆனாலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நாம் முன்பு
சொன்ன அத்தனை வழிகளிலும்-குறிப்பாக-பற்றற்றுப் பணி புரிய நிறைய –முயற்சி எடுத்துக்கொண்டு
பிரயாசைப்பட வேண்டும். உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவனுக்கு அந்த சிரமமே இல்லை! அவனது
மனோபாவம்,அனைத்து செயல்களையும் கடவுளுக்கு சமர்ப்பணம் என்று செய்து விடுவது. நமக்கு
இந்த வேலையைச் செய்ய வேண்டுமென்று பணித்திருப்பது அவன் ஆசியாகும். நம் பணியை நாம் செய்கிறோம்.
பலன் அவனுக்கே உரியது!
செய்யும்
வேலையை பிரார்த்தனை மனோபாவத்துடன் செய்ய வேண்டும். பலனை இறைவனின் பிரசாதமாக ஏற்க வேண்டும்.
இதுதான் பணியின் மூலம் பேரானந்தம் எய்துவதற்கான சூட்சுமம். “கவலைப்படுவது கடவுளின்
வேலை” என்பார் கண்ணதாசன்!
(பேரானந்தம் நிரம்பியது.)
No comments:
Post a Comment