வையம் வாழ்க!
(சர்வோதயம்-
60 களில் ஒரு இதழ்)
வாழ்க எங்கள் தேசம்
என்றும்
வாழ்க எங்கள் கொள்கைகள்;
வாழ்க நித்தமு
முழைப்பினால்
வருந்தினோ ரொடுங்கினோர்!
வாழ்க என்ற ஆர்வ
கோஷம்
வானமே நிறைந்தது!
வாழ வைக்கும் கொள்கையர்க்குள்
வஞ்சனை பிறந்தது!
வாழ்ந்து விட்ட
கொள்கை எங்கும்
வளர வென்றே ஓர்வகை
சூழ்ந்த போது வையம்
எங்கும்
சூதும் குரோதம் சேர்ந்தன!
ஆழ்ந்த துவேஷம்,பகைமை
இந்த
அவனியைப் புகைத்தது!
‘வாழ்க’ என்ற குழுவினர்க்குள்
வாழும் போட்டி மூண்டது!
புகைந்த நெஞ்சில்
ஒளி பிறக்கப்
புதிய வேதம் வந்தது!
இகலும் இல்லை;
துன்பம் இல்லை;
இன்பம் எங்கும் சேர்கெனப்
புகன்ற தூய முனிவன்
நெஞ்சப்
பொய்கை பூத்த தாமரை;
வகையில் இந்த ‘வையம் என்றும்
வாழ்க
என்ற பேருரை!
No comments:
Post a Comment