அப்பாதான் விழித்துவிட்டார்
கேட்போ மென்று
அருகில்வந்து பிள்ளையெல்லாம் சுற்றி நின்று
தப்பாமல் சொல்லிடுங்கள்
எங்கே வைத்தீர்
சற்றேதான் நினைவுகொண்டு சொல்லும் என்ன
செப்புதற்கு நாவருமோ
சித்த மும்தான்
தெளிவாக இருந்திடுமோ தெரிய வில்லை;
அப்போதைக் கிப்போதே
சொல்லி வைத்தேன்
ஆதார்கார்ட் பீரோவில் வெச்சிருக்கேன்!
No comments:
Post a Comment