உலக ஒருமைப்பாட்டுத்
தீர்மானம்
(திருச்சித் தமிழ்
எழுத்தாளர் சங்க மாநாட்டில் வாசித்தது. (1961?)
கல்பட்டிச் சுப்பிமகன்
அமைச்சராகக்
காஷ்மீரப் பெருவெளியை
ஆளவேண்டும்.
கனடாவின் மாதொருத்தி
அவனைக் கண்டு
காதலித்துச் சீனாவில்
மணக்க வேண்டும்.
அரபுமொழிக் கவியொன்றைக்
கிரேக்கன் கற்று
அழகியஃப்ரெஞ்ச்
மொழிதனிலே பெயர்த்தல் ஏண்டும்
கரைநாட்டு இசையில்
அதைப் பாடவேண்டும்
ககனோவிச் அதைக்கேட்டு
ரசிக்கவேண்டும்
வேதியர்கள் குரானை
ஓதவேண்டும்
முகமதியர் பைபிள்
நெறி நிற்றல்வேண்டும்
யூதர்களும் கிறிஸ்தவரும்
ஒன்றாய் நின்று
வேதங்கள் ஸம்ஹிதைகள்
கற்கவேண்டும்!
இதவுணர்வு எங்கெங்கும்
பெருகவேண்டும்
இவ்வுலகம் அன்பாலே
இணையவேண்டும்.
இது பிரதிக்ஞை
முன்மொழிவேன்; ஏற்றுக்கொள்வீர்!
இந்தமாநாட்டில்
இது நிறைவேறட்டும்!
No comments:
Post a Comment