அருள் வாக்கு
(திலகம்-1960)
பாரதப் புண்ணியப்
போர்க்களத்தே-விறல்
பார்த்தனை ஒத்தனர் இன்று மக்கள்!
சாரதியாய் வழி
காட்டுகின்றார்-அறம்
சாற்றிடும் வாசகம் தென்பு தரும்.
தெய்வ சுதந்திரம்
கண்டிடுமுன்- நாம்
தோளொடு தோளெனக் கூடியவர்.
உய்வதுண்டோ அவர்
தம்மைச் செற்று?-சொந்த
உடன்பிறந்தோர் நம் சுற்றமன்றோ?
தர்மம் உரைப்பவர்
இராஜாஜி-அருள்
தெய்விகக் கீதையின் வார்த்தை சொல்வார்
கர்மமியற்றுதல்
நம் கடமை-அதில்
காணும் விளைவினில் எண்ணமின்றி!
No comments:
Post a Comment