படித்ததில் புரிந்தது.
சர்வோதயம்
மோ.க.காந்தி
1.அறிமுகம்.
பெரும்பாலானவர்களின் மகிழ்ச்சிக்காக உழைப்பதுதான் மனிதனின் கடமை என்பது மேலை நாட்டினரின் கருத்து. அவர்களைப் பொறுத்தவரை சந்தோஷம் என்பது சௌகரியமான வாழ்க்கை .நிறையப் பணம். பெரும்பான்மையானவர்களின் சந்தோஷமே நோக்கம் என்பதனால் சிறுபான்மையானவர்கள் சுரண்டப்படுவதில் தவறில்லை என்பது அவர்கள் கருத்து. இந்த சந்தோஷத்துக்காக அற நெறிகளை மீறுவதில் எந்தத் தப்பும் இல்லை என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவிலும் நாம் அவர்களைக் காப்பியடிக்கத் தொடங்கி விட்டோம். மேலை நாட்டவரின் நல்ல விஷயங்களைப் பின்பற்றுவதில் தவறில்லைதான். என்றாலும் அவர்களின் நிலைப்பாடுகள் பொதுவாகத் தவறானவையாகவே இருக்கின்றன.
, அற நெறிகளைப் புறம் தள்ளி விட்டு,,சௌகரியம், பணம் இவற்றின் பின் ஓடுவது தெய்வ நீதிக்கு எதிரானது என்பதுதான் உண்மை .இந்தக் கருத்தை முன்வைத்து, ஜான் ரஸ்கின் என்ற மேலை நாட்டவர் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூலை எழுதினார். இந்தப் புத்தகத்தால் பெரிதும் கவரப்பட்ட காந்திஜி அதன் சுருக்கமாக, சர்வோதயம் என்ற தலைப்பில் சில கட்டுரைகளை வரைந்தார். அதுவே நூலானது.
இந்த நூலில் உள்ள கருத்துகள் மிகவும் நுட்பமாகவே இருப்பதால், நான் புரிந்து கொண்ட வரையில் சிறு சிறு கட்டுரைகளாக அவற்றைத் தமிழில் தர முனைகிறேன்.
பூனை பாற்கடலை நக்குபுக்க கதைதான். ஆசைபற்றி அறையலுற்றேன்.
No comments:
Post a Comment