பவனி வருகிறாள்..
பவனி வருகிறாள்-அவள்
பவனி வருகிறாள்!
பாசக்கணவன் பாரதியோடு
பவனி வருகிறாள்-(அவள்)பெண்ணவள் ஆணுக்(கு)
இளைப்பிலை என்று
பாடிய பாவலன் பாரதியோடு
(பவனி)
கரத்தால் தோளை கவ்விய வண்ணம்
கவிஞர் ஏறு புன்னகை பூக்கப்
(பவனி)
வண்ணத் தேரில் பொற்சிலையாக்
வருகிற வழியில் மக்கள் கூட்டம்
வண்டுகள் போல மொய்த்திடவேதான். பெண்ணரசிஅவள்( பவனி)
பித்தன் மனைவி என்றேசிய ஊர்க்கு
பெருமிதம் சுமந்து பீடுடனே அவள் (பவனி)
கோலம் சிதைத்துக் கொடுமை இழைத்தார்
கோலாகலமாய்க் கோவில் கொள்ளப்(பவனி)
No comments:
Post a Comment