Tuesday, 6 January 2026

இந்திய...2

 காந்திஜி 1909ல் எழுதிய இந்திய சுயரஜ்யம் என்ற புத்த்கத்திலிருந்து சில பகுதிகள்-1

பாராளுமன்றங்களின் தாய் என்று சொல்லப்படுகிற பிரிட்டிஷ்  பாராளுமன்றம் ஒரு மலடி; விலைமகள். கடுமையான வார்த்தைகள். என்றாலும் இதுதான் உண்மை. மிகச் சிறந்தவர்களையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. மெம்பர்கள் ஊதியமில்லாமல் வேலை செய்கிறார்கள். எனவே அவர்கள் பொது நலத்துக்காக உழைக்கிறார்கள் என்று அனுமானித்துக் கொள்கிறோம். வாக்காளர்கள் கற்ற்றிந்தவர்கள். எனவே அவர்கள்  தவறாகத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றும் கருதுகிறோம். அத்தகைய மன்றத்துக்கு மனுக்களின் குவியலோ அல்லது அழுத்தங்களோ தேவையில்லை.  அதன் பணி சீராக நடக்க வேண்டும். இது அதன் அன்றாட நடவடிக்கைகள் மூலம் வெளிப்படையாகத் தெரிய வேண்டும். ஆனால் வாஸ்தவத்தில், பொதுவாகவே உறுப்பினர்கள் கபடஸ்தர்கள் என்பதும் சுய நல வாதிகள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டது. ஒவ்வொருவரும் தங்கள் அற்ப நலனைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அச்சம் என்பதே அவர்கள் உந்து சக்தி. இன்றைக்கு செய்யப்படுவது, நாளைக்கு அழிக்கப்படலாம். பாராளுமன்றத்தின் செயல்பாட்டில் முடிந்தமுடிவு என்று நிரணயிக்கக்கூடிய ஒற்றைச் சம்பவத்தைக் கூடக் காண முடியவில்லை. மிக முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும்போது உறுப்பினர்கள் சாய்ந்து கொண்டு உறங்கி விழுவதைப் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் உறுப்பினர்கள் கேட்பவர்களுக்கு அலுத்துப்போகும் வரையில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கார்லைல் பாராளுமன்றத்தை உலகத்தின் பேச்சுக்கடை என்று விவரித்தார். கட்சி சொல்படி உறுப்பினர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் வாக்களிக்கிறார்கள். கட்டுப்பாடு!  யாராவது ஒருவர், மாறுதலாக, சுயமாக வாக்களித்து விட்டால், அவர் துரோகி எனப்படுகிறார். பாராளுமன்றத்துக்காகச் செலவிடுகிற பணம், நேரம், சில நல்ல மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால்  இங்கிலாந்து மிக உயரிய இடத்தை அடைந்திருக்கும். பாராளுமன்றம் தேசத்தின் விலை அதிகமான விளையாட்டுப் பொம்மை. இது என் கருத்து மட்டுமல்ல. பல அறிஞர்களும் சொல்லியிருப்பதே. ஒருவர் சொல்கிறார், உண்மையான கிறிஸ்தவன், பாராளுமன்ற உறுப்பினன் ஆக மாட்டான் என்று. இன்னொருவர் சொல்கிறார், பாராளுமன்றம் ஒரு பச்சைக்குழந்தை. 700 ஆண்டு வரலாற்றுக்குப் பின்னும் அது குழந்தையாகவே இருந்தால் அது எப்போது வளரப் போகிறது.?

அதனால்தான் பாராளுமன்றம் மலட்டுத்தன்மை உடையது என்று சொல்லப்படுகிறது. 

அது சரி. அது எப்படி விலைமகள் ஆகும்?

(கேட்கலாம் தொடர்ந்து) 

No comments:

Post a Comment