வாசித்ததை யோசிக்கிறேன்.
அறநெறிச் சமயம்
மோ.க.காந்தி.
5.அறம் வெல்லும்; பாவம் தோற்கும்.
நாம் அடிக்கடி ஒரு செயல் நல்லதா தீயதா என்று தீர்ப்பு சொல்கிறோம். அந்தச் செயல் நமக்கு நன்மை தரலாம், தீமை செய்யலாம் அல்லது நம்மை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருக்கலாம். நமக்கு நன்மை செய்தால் அதை ஏற்றுக்கொண்டாலும் கூட, நம் மனம் சொல்லும் தீர்ப்பு-அது தீய செயல் என்று.
ஆக ஒரு செயல் நல்லதா தீயதா என்பது நமது சொந்த நலனைப் பொறுத்ததல்ல.நமது விருப்பத்தையும் பொறுத்ததல்ல. அபிப்பிராயங்கள் அவ்வப்போது மாறலாம். ஆனால் தர்மத்தின் விதிகள் மாறவே. மாறா. யார் இயற்றிய விதிகள் அவை? பிரபஞ்ச விதிகள்!
அரசாங்கத்தின் விதிகள் உள்ளன. . அரசாங்கச் சட்டத்தை மீறுவேன்; அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லலாம். ஆனால் யாரும் தர்மத்தை மீறுவேன்; பொய் சொல்லுவேன் என்பது போல மனமாரச் சொல்ல முடியாது. தர்மத்தை மீறி விட்டு அதை வெளியில் நியாயப்படுத்தலாமே தவிர, மனத்தின் குரலை அடக்கி விட முடியாது. அதனால்தான் சொன்னார் திருவள்ளுவர்,
,”தன் நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்று.
கொடுங்கோல் அரசன் அநீதியாகச் செயல்படலாம். பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். கற்றறிந்தோரும், நீதிநெறிகளை நன்குணர்ந்தவர்களும், மௌனமாய் இருக்கலாம் “தீங்கு தடுக்கும் திறமில்லேன்” என்று தன்னிரக்கப் படலாம்,. அதற்காக அதர்மம். தர்மம் ஆகி விடுவதில்லை..
அற எது என்பது மாறாத தெய்வ நீதி என்பது மட்டும் அல்ல. ”அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்பதும் தெய்வ நீதியே.
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனு மியற்கை
மருமம்”
என்றான் பாரதி.
No comments:
Post a Comment