Wednesday, 7 January 2026

அறநெறி

புத்தகச் சுருக்கம்

அறநெறிச் சமயம்

மோ.க.காந்தி

3.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்

மதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமில்லை; ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியமில்லை என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறான கருத்து. எந்த மதத்தை எடுத்துப் பார்த்தாலும் அதன் முக்கியமான பகுதியாக ஒழுக்கத்தை வலியுறுத்திச் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம்

எல்லாரும் செய்கிறார்களே? நாம் மட்டும் ஏன் செய்யக்கூடாது? என்று ஒழுக்கமற்ற செயலைச் செய்யக்கூடாது. நாம் மட்டுமே தனித்து நின்றாலும், உலகமே எதிர்த்து நின்றாலும், நமக்கு நியாயம் என்று படுவதை அச்சமின்றிச் செய்ய வேண்டும். ”எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி”

தன்னலத்தை மட்டுமே பேணும் ஆசைகள் ஒழுக்கத்துக்குப் புறம்பானவையே. நம்மை நாம் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் ,பிறருக்குத் தொடர்ந்து நல்லது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று கொள்ளும் ஆசைகளே ஒழுக்கத்தின் பாற்படும். நல்லது செய்வதில், ”அப்பா! இவ்வளவு செய்து விட்டோம்; இது போதும்” என்று சொல்லிக்கொள்வதற்கில்லை. அறம் செய விரும்பு; விரும்பிக்கொண்டே இரு!

எந்த்த் தொழில் செய்தாலும் பொய்யகலத் தொழில் செய்ய வேண்டும் .எந்தத் தனிநபரிடம் ,குடும்பங்களில் தீயொழுக்கம், பகை, பொய்ம்மை ஆகிய வித்துக்கள் தூவப்பட்டுள்ளனவோ,அந்தத் தனிநபர்,  குடும்பம் அழிவை எய்துவது திண்ணம்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம் என்றும் இடும்பைதரும், 

நல்லது செய்யும் முயற்சிகளே நல்லொழுக்கம். இந்தத் திற்வுகோலை வைத்துக்கொண்டு நல்லொழுக்கத் திரவியப்பேழையைத் திறப்போமானால், எடுத்துக் கொள்ள வேண்டிய பல நன்னெறிப் பொக்கிஷங்கள் இருப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment