படித்ததில் புரிந்தது-4
சர்வோதயம்
மோ.க.காந்தி
உண்மையின் வேர்கள்(3)
இன்னோர் எளிய உதாரணம். ராணுவத் தலைவருக்கும் போர் வீர்ருக்கும் இடையேயான உறவு.. படை மிகப் பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும், தனக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாது என்ற நோக்கத்துடன் தலைவன் “ராணுவக் கட்டுப்பாட்டை”ச் செயல்படுத்துவான் என்றால், சுய நல நோக்கம் காரணமாக, அவனால் வீர்ர்களின் முழுத்திறமையையும் வெளிக் கொணரவோ,அவர்களது வளர்ச்சிக்கு உதவவோ, முடியாது. ஆனால் அவன் வீர்ர்களுடன் நேசத் தொடர்பு வைத்திருந்து, அவர்களது நலனில் முழுமையாக அக்கறை செலுத்தி, அவர்களது உயிருக்கு மதிப்புக் கொடுப்பவனாய் இருந்தால், அவன் மீதுள்ள அன்பின் காரணமாக, அவனது பண்பின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக, அவர்களது முழுத் திறமையும் பரிமளிக்கும். இதைத் தவிர சிறந்த சாதனைக்கான வேறு வழி எதுவும் கிடையாது, வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இடங்களில் இது மேலும் தெளிவாக விளங்கும். வீர்ர்கள் தலைவனை வெறுத்திட்ட போதிலும் தாக்குதல்கள் வெற்றி அடையலாம். ஆனால் போரில் வெற்றி என்பது, தலைவனுக்கும் செயல்வீர்ர்களுக்கும் இடையே நேசத்தொடர்பின்றி விளைந்தது கிடையாது
(தொடரும்)
.
No comments:
Post a Comment